'நானே அதிமுக பொருளாளர்' - வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். இதனால், அதிமுகவின் வங்கி வரவு செலவு கணக்குகள் அவற்றை கையாளுவதற்கான அதிகாரம் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து திண்டுக்கல் சீனிவாசனிடம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொருளாளர் நானே என்று அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தன்னை தவிர அதிமுக வரவு, செலவுகளை கையாள வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
பொருளாளர் விவகாரத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவருமே அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.