ஐ அம் வெயிட்டிங்... கோவையில் போட்டியிடும் அண்ணாமலையை குறிப்பிட்டு அ.தி.மு.க. வேட்பாளர் பதிவு
நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இதில் இடம் பெற்று இருந்தது. தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐ.ஜே.கே மற்றும் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்துத்தான் மொத்தம் 9 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சிங்கை ஜி. ராமச்சந்திரன், தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையின் பெயரை குறியிட்டு, டேக் செய்து "ஐ அம் வெயிட்டிங்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story