நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன்:பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன்: தமிழக யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேச்சு

நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன்:பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன்: தமிழக யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேச்சு
x

பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன். நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன் என்று தமிழகத்தில் யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன். நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன் என்று தமிழகத்தில் யாத்திரையை முடித்ததும் ராகுல்காந்தி பேசினார்.

ராகுல்காந்தி பேச்சு

தமிழகத்தில் 4 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொண்ட ராகுல்காந்தி நேற்று குமரி மாவட்டம் தலச்சன்விளையில் முடித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பாதயாத்திரை மிகவும் சுகமான அனுபவமாக இருந்தது. யாத்திரையின் கொள்கைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை தற்போது பல நிறுவனங்களும், சிலரும் இணைந்து சாதி, மத ரீதியில் பிரித்து ஒற்றுமை இல்லாமல் உருவாக்க துடிக்கிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு நன்மை செய்வதற்காகவும், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு நன்மை செய்வதற்காகவும் மக்களை பிரிக்கிறார்கள்.

பெரியார் மண்ணை பிரிகிறேன்

அதற்காக மக்களிடத்தில் மோதலை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குவதே ஆட்சியாளர்களின் லட்சியமாக உள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியா என்பது ஓரிரு முதலாளிகளுக்கு உரிய நாடு அல்ல. கோடான கோடி மக்களுக்கு உரிமையானது.

இந்திய மக்களின் கடும் உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடைக்கவில்லை. இதை மாற்றத்தான் இந்த பயணம். தமிழக மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. எனவே மிகுந்த வருத்தத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். பெரியார் மண்ணை வருத்தத்தோடு பிரிந்து செல்கிறேன். ஆனால் நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்க உள்ளேன் என்கின்ற மகிழ்ச்சியில் செல்கிறேன். நாராயண குருவும், பெரியாரும் ஒரே கருத்தை தான் வலியுறுத்தி உள்ளார்கள். ஏழை, மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெரியவர்கள் அவர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story