சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஆதரிக்கிறேன்-கார்த்தி சிதம்பரம் எம்.பி.பேட்டி
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.பேட்டி அளித்தார்.
திருச்சி
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சனாதனம் என்றால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் என்று தான் அர்த்தம். அந்த வகையில் உதயநிதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நானும் கோவிலுக்கு செல்கிறேன். கோவிலுக்கு செல்வதற்கும் சாமி கும்பிடுவதற்கும், சனாதனத்திற்கும் என்ன சம்பந்தம். பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தார்களா அல்லது சனாதனத்தை பின்பற்ற வேண்டும் என கற்றுக் கொடுத்தார்களா..? சனாதனத்திற்கும் சாமி கும்பிடுவதற்கும் சம்பந்தமில்லை, இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story