நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்
x
தினத்தந்தி 23 Jun 2023 3:00 AM IST (Updated: 23 Jun 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோயம்புத்தூர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

பள்ளிகளுக்கு உபகரணங்கள்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தில் டாடாபாத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கினார்.

மேலும் அவர், பெரியகடை வீதி, ம.ந.க.வீதி மாநகராட்சி பள்ளிகளுக்கும் மேஜை, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி மாணவர்களிடம் பேசினார்.

பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆசிரியர்கள் பற்றாக்குறை

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கி றது. ஆனால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதால் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி படிக்கும் மாணவர்களை ஒரே வகுப்பில் வைத்து பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டு வருகி றது.

ஆசிரியர் தேர்வு நடத்துவதில் நீண்டகாலமாக பிரச்சினை இருக்கிறது. இதனால் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே அரசு பள்ளிகளுக்கு என்னென்ன தேவை என்பதை கணக்கெடுத்து உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். ஜி-20 மாநாட்டை நமது நாடு தலைமை ஏற்று நடத்துகிறது.

இந்த மாநாடு தொடர்பான விழிப்புணர்வை இளைய தலைமுறையின ரிடம் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

விஜய் வருவதை வரவேற்கிறேன்

விமர்சனம் எது? பொய் எது என்பதுகூட தி.மு.க. அரசுக்கு தெரியவில்லை. டுவிட்டரில் சிறிய கருத்து பதிவிட்டால்கூட கைது நடவடிக்கை என்றால் இந்த அரசு வலுவிழந்து விட்டதா?, சின்ன சின்ன விமர்சனங்களை கூட தி.மு.க. அரசால் எதிர் கொள்ள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். இங்கு ஒரு நடிகர் அரசியலை படசூட்டிங் போன்று நினைத்து அடிக்கடி வந்து செல்கிறார்.

இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது. அரசியலுக்கு வருபவர்கள் மக்களுக்கு தேவையான பணிகளை செய்பவர்களாக இருக்க வேண்டும்.

நடிகர் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story