'எனக்கு கொடுக்கப்படும் பணியை சிறப்பாக செய்வேன்' - தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழிசை சவுந்தரராஜன்


எனக்கு கொடுக்கப்படும் பணியை சிறப்பாக செய்வேன் - தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 3 March 2024 4:46 PM IST (Updated: 3 March 2024 4:54 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 'பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் மாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்வில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"நான் எப்போதுமே கூறுவது போல், தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை ஆண்டவனும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள். இப்பொழுது நான் எனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண காரியகர்த்தா. எனக்கு கொடுக்கப்படும் பணியை சிறப்பாக செய்வேன். மற்ற முடிவுகள் அனைத்தும் ஆண்டவனிடம் உள்ளன."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.




Next Story