எலி மருந்து தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் பரிதாப சாவு

எலி மருந்து தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் பரிதாப சாவு
இடிகரை
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்தவர் விகாஷ் (வயது 32), ஐ.டி. ஊழியர். இவர் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு விகாஷ் வீட்டில் இருந்தபடி வேலை செய்துபோது தூக்கம் வராமல் இருக்க பிஸ்கெட் சாப்பிட்டுள்ளார். இதில், அவர் தவறுதலாக எலி மருந்து தடவிய பிஸ்கெட்டை சாப்பிட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் அவருக்கு தொடர் வாந்தி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிசிக்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விகாஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






