துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை


துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை
x

துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்

துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு 60 துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

மேலும் தாட்கோ திட்டத்தில் 3 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சம் மானியத்தில் வங்கி கடன் மூலமாக 2 ஆட்டோ, 1 டிராக்டர் ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார். இதில் தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜஸ்ரீ, அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story