சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

ஜோலார்பேட்டை பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஜோலார்பேட்டை பகுதிகளில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டனர். நகராட்சி சார்பில் 125 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜி.பழனி, நகராட்சி பொறியாளர் பி.சங்கர், நகர மன்றத் துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அமைப்பு ஆய்வாளர் நளினா தேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர் தலைமை தாங்கி அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் இந்த அடையாள அட்டை மூலம் வங்கி கடன் பெறுதல் குறித்தும் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வது குறித்தும் அவர் எடுத்துக் கூறினார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.