அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி


அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
x

தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 185 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இ்ந்த மாணவ- மாணவிகளுக்கு பெல்ட், காலணி, டைரி, அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் நடந்தது. மாணவ- மாணவிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்களை தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வழங்கினாா். நிகழ்ச்சியில் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் , முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாகூரான் துணைத்தலைவர் வீரராசு, ஆசிரியைகள் அனிதா, சந்தானமேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story