சிறு குறு தொழில் தொடங்க வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தால் தொழில்வளம் பெருகும் - கனிமொழி எம்.பி.


சிறு குறு தொழில் தொடங்க வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தால் தொழில்வளம் பெருகும் - கனிமொழி எம்.பி.
x

சிறு குறு தொழில் தொடங்க வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தால் தொழில்வளம் பெருகும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கமான துடிசியா சார்பில் தொழில் கண்காட்சி துவங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியை கனிமொழி எம்.பி., நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

வங்கிகளை பொறுத்தவரை பெரிய அளவிலான தொழில் தொடங்குவதற்கு கேள்விகள் எதுவும் இல்லாமல் எளிதில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் சிறு குறு தொழில் நிறுவனத்தினர் புதியதாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் கேட்டால் அதிக அளவிலான கேள்விகளை கேட்கிறார்கள், இது கடன் கேட்பவர்களுக்கு மிகப்பெரும் சவாலாகவே உள்ளது.

அதோடு இந்த கடன் கேட்கும் நிலையானது ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டுவதுபோல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆயிரம் கோடி கடன் கொடுத்துவிட்டு கடன் பெற்றவர்களை வங்கிகள் தேடும் நிலை இன்று உள்ளது. சொந்த ஊர்களில் இருக்க கூடியவர்களுக்கு சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் கொடுக்க முக்கியத்துவம் கொடுத்தால் மாநிலமும், மாநில மக்களும் வளம் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story