சாலைகளை புதுப்பித்து தராவிட்டால் பல்லாங்குழி விளையாடும் போராட்டம்


சாலைகளை புதுப்பித்து தராவிட்டால் பல்லாங்குழி விளையாடும் போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2023 1:00 AM IST (Updated: 28 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சோலையாறு நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை புதுப்பித்து தராவிட்டால் பல்லாங்குழி விளையாடும் போராட்டம் நடத்துவோம் என்று தோட்ட தொழிலாளர்கள் கூறினர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

சோலையாறு நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை புதுப்பித்து தராவிட்டால் பல்லாங்குழி விளையாடும் போராட்டம் நடத்துவோம் என்று தோட்ட தொழிலாளர்கள் கூறினர்.

குண்டும் குழியுமான சாலை

வால்பாறை அருகே சோலையாறு நகர் பகுதியில் இருந்து முருகாளி எஸ்டேட் வரை செல்லும் 4 கிலோ மீட்டர் தூர சாலை, உருளிக்கல் எஸ்டேட் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து மானாம்பள்ளி வரை செல்லும் 8 கிலோ மீட்டர் தூர சாலை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சாலைகளை சேக்கல்முடி, முருகாளி, கலியாணபந்தல், புதுக்காடு மற்றும் மானாம்பள்ளி ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நடவடிக்ைக இல்லை

இந்த நிலையில் மேற்கண்ட சாலைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை புதுப்பித்து இருந்தால்கூட முன்கூட்டியே அந்த 12 கிலோ மீட்டர் தூர சாலையை புதுப்பித்து இருக்கலாம்.

போராட்டம் நடத்துவோம்

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள அந்த சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் சாலை இன்னும் மோசமாகக்கூடும்.

எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலைகளை புதுப்பித்து தர வேண்டும். இல்லையென்றால் குண்டும், குழியுமாக கிடக்கும் அந்த சாலைகளில் பல்லாங்குழி விளையாடும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story