தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை


தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
x

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், உங்கள் அமைச்சர் பொறுப்பே நழுவி விடும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

மக்களவை தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக - பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும்.

அமைச்சர்களின் மாவட்டம் - பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story