ஆன்லைனில் பதிவு செய்தால்வீடு தேடி வரும் தேசியக்கொடி:தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்


ஆன்லைனில் பதிவு செய்தால்வீடு தேடி வரும் தேசியக்கொடி:தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் பதிவு செய்தால் வீடு தேடி தேசியக்கொடி வரும் என்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தேனி

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுதந்திர தினத்தையொட்டி தேனி தபால் கோட்டம் சார்பில், இல்லம் தோறும் மூவர்ணக்கொடி-2023 என்ற திட்டத்தின் கீழ் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இல்லங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு தேசியக்கொடி ரூ.25 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று இதனை வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாக கொடிகள் வாங்க விரும்பும் பொதுமக்கள் https://www.epostoffice.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்தால், தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story