ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகை


ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகை
x

ஓச்சேரி அருகே ஐ.எப்.எஸ். நிதி நிறுவன ஏஜெண்டு வீட்டை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர்.

ராணிப்பேட்டை

ரூ.80 கோடி முதலீடு

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி கிராமத்தில் ரோடுதெருவில் வசித்து வந்தவர் சதிஷ் என்கிற சத்தியமூர்த்தி (வயது 40). இவர் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஓச்சேரி, பெரும்புலிப்பாக்கம், அவளூர், களத்தூர், சித்தஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.80 கோடி வரை பெற்று ஐ.எப்.எஸ். நிதிநிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சதிஷ் இறந்துவிட்டார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஐ.எப்.எஸ். நிதிநிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான முறையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரல் நிதி நிறுவனம் மூடி சீல்வைக்கப்பட்டது.அதன் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று ஐ.எப்.எஸ். ஏஜெண்டான சித்தஞ்சி கிராமத்தை சார்ந்த சதிஷ் வீட்டின் முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கட்டிய பணத்தை திருப்பிதரக்கோரி முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, அவளூர் சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி ஆகியோர் சென்று முற்றுகையில் ஈடுபட்ட முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story