சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரான்மலை ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது, சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் கலந்து கொண்டார். முன்னதாக ஜமாத் தலைவர் சாதிக் ராஜா, செயலாளர் சேட் முகமது, பொருளாளர் காஜாமைதின் முகமது வரவேற்றனர். திருவண்ணாமலை ஆதீனம் 5 கோவில் தேவஸ்தானம் முதல் ஸ்தானிகரும் சிவகங்கை அறநிலையத்துறை மண்டல கமிட்டி சிவாச்சாரியார் உமாபதி சிவாச்சாரியார், அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை அருள் பவுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், பிரான்மலை ஊராட்சி தலைவர் ராமசுப்பிரமணியன், சிங்கம்புணரி நகர அ.தி.மு.க. செயலாளர் வாசு, ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர துணை செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் கருப்பையா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் கருப்பையா, கிருங்காகோட்டை ஸ்டாலின் மற்றும் சந்திரன், சுப்பையா, பால்ராஜ், பழனிசாமி, கண்ணன், கண்ணன், பாக்கியம், சரவணன், குமார் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள், சிவாச்சாரியார்கள், கிராம முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.