சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர் இளைய பெருமாள், இளைய பெருமாள் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை தான் என்றார்.அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story