குறை தீர்க்கும் முகாமில் 78 மனுக்களுக்கு உடனடி தீர்வு


குறை தீர்க்கும் முகாமில் 78 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

குறை தீர்க்கும் முகாமில் 78 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் பொது வினியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமை அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். மேலும் அவர், முகாமில் பயனாளிகள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து, அதற்கான ஆணைகளை வழங்கினார். முகாமில் ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல்அலுவலர் ஜானகிராமன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட பொதுமக்கள் அளித்த 78 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Next Story