சிறுவாபுரி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


சிறுவாபுரி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x

சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த கோவிலை தமிழக இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சிறுவாபுரி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19 ஆண்டுகளுக்கு பின்னர், குடமுழுக்கு விழா நடைபெறுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிறுவாபுரி விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story