"நெருங்கும் மான்டஸ் புயல்" - சென்னையில் தரைக்காற்று அதிகரிப்பு


நெருங்கும் மான்டஸ் புயல் - சென்னையில் தரைக்காற்று அதிகரிப்பு
x

புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் வேகம் மேலும் குறைந்துள்ளது. இன்று அதிகாலை மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

மாண்டோஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது. புயல் காரணமாக சென்னையில் தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் , பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.


Next Story