இந்தியை போன்று ஆங்கில திணிப்பையும் தடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


இந்தியை போன்று ஆங்கில திணிப்பையும் தடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

இந்தியை போன்று ஆங்கில திணிப்பையும் தடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி குழு அமைத்து, இந்தி மொழியின் பயன்பாடு தொடர்பாக மதிப்பீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், இந்தி குழுக்களை கலைக்க வேண்டும்.

அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், தமிழ் 100 சதவீதம் அலுவல் மொழியாக இல்லை. எல்.கே.ஜி. முதல் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. இந்தி மட்டுமின்றி ஆங்கிலமும் திணிக்கப்பட்டு வருகிறது. அதை தடுத்து, தொடக்க கல்வி தமிழ் வழியில் கற்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story