சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைேசலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
எடப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்
எடப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பாலியல் தொந்தரவு
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நைனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது, அவரது இரண்டரை வயது பெண் குழந்தை மட்டும் வீட்டில் இருந்துள்ளது. குழந்தையின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.
இதனால் செந்தில்குமார் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.