முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:46 PM GMT)

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விவசாயி கொலை

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள துடுகனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 64). விவசாயி. இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சோந்த ராஜமாணிக்கம் (65) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தன், கத்தியை எடுத்து சென்று ராஜமாணிக்கத்தை வெட்டினார். அப்போது கோவிந்தனின் மகன் காவேரி (41), மருமகள் செல்வி (37) ஆகியோரும் உடனிருந்து உள்ளனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

கோவிந்தன் வெட்டியதால் படுகாயம் அடைந்த ராஜமாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தன், அவரது மகன் காவேரி, மருமகள் செல்வி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தாமோதரன் தீர்ப்பு வழங்கினார்.

5 ஆண்டு சிறை

அதில், கொலை செய்யும் நோக்கத்தில் ராஜமாணிக்கத்தை வெட்டியதற்கு கோவிந்தனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ஆயுதங்களுடன் சென்று தாக்கிய குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

காவேரியை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும், செல்விக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குமரவேல் ஆஜரானார்.


Next Story