நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை


நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை
x

நன்னடத்தை பிணையை மீறியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சைக்கிளி (வயது 36). இவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அதனை தடுக்க இவரிடம் கடந்த 9.7.2022 அன்று ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. ஆனால் பச்சைக்கிளி அதனை மீறி குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவர் மீது பெருமாள்புரம் போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் அவரை 8 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க மாநகர நிர்வாக செயல் துறை நடுவர் மற்றும் மாநகர துணை கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் உத்தரவிட்டார்.


Next Story