கள்ளக்குறிச்சியில் வெவ்வேறு வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


கள்ளக்குறிச்சியில் வெவ்வேறு வழக்கில் கைதான    3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் வெவ்வேறு வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடந்த கலவரத்தின் போது, காவல்துறை வாகனங்கள், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்தில், எலியத்தூர் கிராமம் துருப்புக்காரன் மகன் ராஜீவ்காந்தி (வயது 41) என்பவரை சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற, குற்றங்களில் இவர் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து, ராஜீவ்காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார், சிறை காவலர்கள் மூலம் ராஜீவ்காந்தியிடம் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி, சுப்பிரமணி, குமரேசன் ஆகிய 3 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.

இதேபோன்று, தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னசேலம் அருகே பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் சுப்பிரமணி (43), தனது 8 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்படடுள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஆகியோரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கான உத்தரவு நகலும் சிறை அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.


Next Story