மாவட்டத்தில் 8 மையங்களில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு: 2,738 பேர் எழுதினர்


மாவட்டத்தில் 8 மையங்களில்  கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு:  2,738 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது

தேனி

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது. கொடுவிலார்பட்டியில் அமைக்கப்பட்ட மையத்தில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள 11 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர் இதில் 981 பேர் தேர்வு எழுதினர். தாசில்தார் சுந்தர்லால் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட மையத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த தேர்வு மையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆண்டிப்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 3 ஆயிரத்து 720 பேர் அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 738 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தவர்களில் 982 பேர் தேர்வு எழுத வரவில்லை.


Related Tags :
Next Story