குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை


குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்  தொழிலாளி கொலை
x

அருமனை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அருமனை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குடிபோதையில் தகராறு

அருமனை அருகே உள்ள மலைக்கோடு பிலாங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 52). தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நண்பருடன் நேற்று மாலை மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், தாசை அவருடைய நண்பர் பிடித்து தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தாசுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நள்ளிரவில் தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் விரைந்து வந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தாசை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த நண்பரை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story