குடும்ப தகராறில் மைத்துனரை ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி; டிரைவர் கைது


குடும்ப தகராறில்   மைத்துனரை ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி; டிரைவர் கைது
x

கம்பத்தில் குடும்ப தகராறில் மைத்துனரை ஜீப் ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர

தேனி

குடும்ப பிரச்சினை

தேனி மாவட்டம் கூடலூர் கன்னிகாளிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 40). ஜீப் டிரைவர். இவரது மனைவி ராஜலட்சுமி (37). இந்த தம்பதிக்கு ஸ்ரீ (12), மோனிகா (7) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் ராஜலட்சுமி கோபித்துகொண்டு கம்பத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை தனது குழந்தைகளை பார்ப்பதற்காக ராஜகோபால் கம்பத்திற்கு ஜீப்பில் வந்தார். அப்போது ராஜலட்சுமி, ராஜகோபால் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு வந்த ராஜலட்சுமியின் அண்ணன் செந்தில்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் ராஜகோபாலை தட்டி கேட்டனர்.

ஜீப்ைப ஏற்றி கொல்ல முயற்சி

இதனால் கோபத்தில் ராஜகோபால் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்த ராஜகோபால் அதிவேகமாக ஜீப்பை ஓட்டி வந்து செந்தில்குமார் மீது மோதி கொல்ல முயன்றார். அப்போது அப்பகுதியில் வீட்டின் முன்பு தனது குழந்தையுடன் நின்றிருந்த மஞ்சுளா என்பவர் மீதும் ஜீப் மோதியது. இதில் மஞ்சுளா, குழந்தை ஜீவிதா, செந்தில்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மஞ்சுளா, செந்தில்குமார் ஆகியோர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப் பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தார். குடும்ப பிரச்சினை காரணமாக மைத்துனரை ஜீப் ஏற்றி டிரைவர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story