அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராகலாம்-கே.சி.வீரமணி பேச்சு


அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராகலாம்-கே.சி.வீரமணி பேச்சு
x

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராகலாம் என முன்னாள் அமைச்சரான மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி வழங்கி பேசினார்.

திருப்பத்தூர்

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராகலாம் என முன்னாள் அமைச்சரான மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி வழங்கி பேசினார்.

அ.தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை

திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் ஹீல்ஸ்சில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் டாக்டர் லீலா சுப்ரமணியம், துணைச் செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், அனைவரையும் மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி. சங்கர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் படிவங்களை நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கே.சி. வீரமணி வழங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வில் 1½ கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது அ.தி.மு.க.வில் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

தி.மு.க.வின் 'பி' அணி

ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் கருணாநிதியை புகழ்ந்தும் தி.மு.க. ஆட்சியை புகழ்ந்தும் பேசுகிறார். இவர் தி.மு.க.வின் பி அணியாக செயல்படுகிறார்.

நீங்கள் புதிய உறுப்பினர்களிடம் ரூ.10 பெற்று புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவர்களிடம் சாதாரண அ.தி.மு.க. உறுப்பினர் அமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் ஆகலாம் என எடுத்து கூற வேண்டும்.

கோர்ட்டு தீர்ப்புகள்

சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார்கள். தற்போது அதனை மக்கள் உணர்ந்து விட்டார்கள். அனைத்து தரப்பிலும் தி.மு.க.வுக்கு எதிராக உள்ளனர்.

வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். எனவே அனைவரும் கடுமையாக உழைத்து புதிய உறுப்பினர்களை அ.தி.மு.க.வில் சேர்க்க அனைவரும் பாடுபட வேண்டும்.

புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளை நானே நேரில் வந்து வழங்குவேன். அனைவரும் வரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் டி.டி.குமார் பேசுகையில், ''அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் திருப்பத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கி தரப்பட்டது. திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 5ஆயிரம் புதியஉறுப்பினர் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக அதற்கு மேலும் அதிகமானவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்த்து முதலிடம் பிடிக்கும் படி பணிகளை செய்வோம்.

நிர்வாகிகள்

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.ஜி. ரமேஷ், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்பிரமணியம், தம்பாகிருஷ்ணன், கந்திலி ஜெயலலிதா ஒன்றிய செயலாளர் ஆர்.ஆறுமுகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆர்.நாகேந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ரா.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி டி..எம்.ரவி, மின்சார வாரிய மண்டல செயலாளர் சி.ரங்கநாதன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத் தலைவர் ஜி.ரங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story