திண்டிவனம் அருகேஉடைக்க முடியாத ஆத்திரத்தில் கோவில் உண்டியலுக்கு தீமர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


திண்டிவனம் அருகேஉடைக்க முடியாத ஆத்திரத்தில் கோவில் உண்டியலுக்கு தீமர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே உடைக்க முடியாத ஆத்திரத்தில் கோவில் உண்டியலுக்குள் தீயை கொளுத்தி போட்டு சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்


வானூர்,

திண்டிவனம் அருகே மொளச்சூரில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் உண்டியலுக்குள் இருந்து கரும்புகை வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கிளியனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

உண்டியலுக்குள் தீ

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்மநபர்கள் யாரோ உண்டியலை உடைக்க முயன்றதும், முடியாததால் ஆத்திரத்தில் காகிதத்தில் தீயை கொளுத்தி உண்டியலுக்குள் தூக்கிப் போட்டு விட்டு தப்பியது தெரியவந்தது.

இதில் உண்டியலுக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் தீயில் கருகி இருக்கலாம் எனவும், நாணயங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story