அந்தியூரில் ரோட்டில் குட்டை போல் தேங்கி நிற்கும் மழை நீர்
அந்தியூரில் ரோட்டில் குட்டை போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.
ஈரோடு
அந்தியூர்-
அந்தியூர் பர்கூர் ரோட்டில் இருந்து ஏ.எஸ்.என். காலனி பகுதிக்கு செல்லக்கூடிய ரோட்டில் மழை நீர் பல நாட்களாக குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த ரோடு வழியாக வாகனங்களில் மற்றும் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே ரோட்டில் குட்டை போல் தேங்கி நிற்கும் மழை நீரை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story