அந்தியூரில்ரூ.3½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை


அந்தியூரில்ரூ.3½ லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x

அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 160 மூட்டைகளில் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 19-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 619-க்கும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனது.

இதேபோல் 21 மூட்டைகளில் நிலக்கடலை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 919-க்கும், அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 619-க்கும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ.48 ஆயிரத்து 726-க்கு நிலக்கடலை விற்பனையானது. ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் பருத்தி, நிலக்கடலையை ஏலம் எடுத்து சென்றனர்.


Related Tags :
Next Story