அந்தியூர், கோபி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு


அந்தியூர், கோபி பகுதிகளில் உள்ள  ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு
x

அந்தியூர், கோபி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினா்.

ஈரோடு

அந்தியூர், கோபி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்தியூர்

அந்தியூர், தவுட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குணசேகரன், சதீஷ்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 15 ஓட்டல்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கெட்டுப்போன மீன் இறைச்சி 1 கிலோ மற்றும் 6 கிலோ அரிசி சாதம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ பாலித்தீன் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 3 ஓட்டல்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உணவகங்களில் சாப்பிட வருபவர்களுக்கு தரமான உணவுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

கடத்தூர்

கோபி பகுதியில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் நகராட்சி தூய்மை பணி ஆய்வாளர் நீருபன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 8 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில்

4 கடைகளில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி, கோழிக்கறி, மீன், சில்லி சிக்கன் என 23 கிலோ எடைகொண்ட உணவுகளை அதிகாரிகள் கண்டுபிடித்து அழித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஓட்டல்களில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story