வழிப்பறி கும்பல் தாக்கியதில் வாலிபர் பரிதாப சாவு


வழிப்பறி கும்பல் தாக்கியதில்   வாலிபர் பரிதாப சாவு
x

நெல்லை அருகே வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் ஒப்பந்ததாரர்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பாலஸ்தீனபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 35). தனியார் ஒப்பந்ததாரர். இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி - நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

நெல்லை அருகே உள்ள கவுசானல்புரம் அருகே சென்றபோது பாலகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் திடீரென பாலகிருஷ்ணன் தலையில் கல்லை தூக்கி போட்டதாக கூறப்படுகிறது.

வழிப்பறி

பின்னர் மர்ம நபர்கள், பாலகிருஷ்ணனிடம் இருந்து 80 கிராம் வெள்ளிக்கொடி, செல்போன், மோட்டார் சைக்கிள், ரூ.100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த இளங்கோ (20), பேய்குளம் பகுதியை சேர்ந்த செங்கான் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story