பவானியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


பவானியில்  தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

பவானியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

பவானி

பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி பாலத்தின் கீழ் நேற்று மாலை 5 மணி அளவில் ஆண் ஒருவர் கயிற்றில் தூக்குப்போட்டு் பிணமாக தொங்குவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் தூக்கில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 'தூக்கில் பிணமாக தொங்கியவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சார்ந்த பழனிவேல் என்பவரின் மகன் சுபாஷ் (வயது24). சேலை மடிக்கும் தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இந்தநிலையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றவர் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்' என்பது தெரியவந்தது.

சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story