சென்னையில் 'பிங்க்' நிற பஸ்சின் கண்ணாடி உடைப்பு - கல்லுாரி மாணவர்கள் வெறிச்செயல்...!
சென்னையில் 'பிங்க்' நிற பஸ்சின் கண்ணாடியை கல்லுாரி மாணவர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை பிராட்வேயில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி, நேற்று காலை பயணியருடன் பிங்க் நிற மாநகர பஸ் சென்றது. டிரைவர் ராஜேந்திரன் பேருந்தை ஓட்டினார். நடத்துனராக சசிகுமார் இருந்தார். பல்லவன் சாலை நிறுத்தத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் ஏறினர்.
அனைவரும் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டுப்பாடி கிண்டலடித்து வந்தனர். இதை, ராஜேந்திரன், சசிகுமார் ஆகியோர் தட்டிக்கேட்டனர்.இந்த நிலையில் பஸ் தேவி தியேட்டர் அருகில் வந்தபோது, கீழே இறங்கிய மாணவர்கள், பாட்டிலால் பஸ்சின் பின் பக்க கண்ணாடியை உடைந்து தப்பினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், பஸ்சின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story