சென்னிமலையில்54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது;வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை


சென்னிமலையில்54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது;வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவால் நடவடிக்கை
x

சென்னிமலையில் வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதால் 54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலையில் வனத்துறைக்கு சொந்தமான இடம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டதால் 54 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

பெட்ரோல் பங்க்

சென்னிமலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் கடந்த 1969-ம் ஆண்டு தனியார் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டது. அப்போது சென்னிமலை மற்றும் 20 கி.மீ சுற்றளவில் வசித்த பொதுமக்கள் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக இந்த ஒரே பெட்ரோல் பங்கிற்கு தான் வரவேண்டும். இந்த பெட்ரோல் பங்க் வனப்பகுதியை ஒட்டியபடி இருந்ததால் அது வனத்துறைக்கு சொந்தமான இடம் என அங்கு பெட்ரோல் பங்க் அமைத்ததற்கு வனத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் இதுகுறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் பல வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் அமைந்துள்ள இடம் வனத்துறைக்கே சொந்தமானது என்றும், அதனால் பெட்ரோல் பங்கை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

காலி செய்ய உத்தரவு

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக பெட்ரோல் பங்க் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். ஆனால் இந்த வழக்கு நீண்ட வருடங்களாக சென்னை ஐகோர்ட்டில் நடந்துள்ளதை மேற்கோள் காட்டி மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. அதனால் சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் படி பெட்ரோல் பங்கை 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என வனத்துறையினர் சார்பில் பெட்ரோல் பங்க் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் பங்கை காலி செய்யாவிட்டால் தகுந்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்துள்ளனர்.இந்தநிலையில் பெட்ரோல் பங்கில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விரைவில் அகற்றி விடுவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் உறுதியளித்ததால் வனத்துறையினர் அவர்களுக்கு அவகாசம் அளித்ததாக தெரிகிறது. தற்போது பெட்ரோல் பங்க் இருந்த பகுதியை சுற்றிலும் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.


Next Story