செட்டியாபத்தில்வெறிநோய் தடுப்பு திட்ட முகாம்


செட்டியாபத்தில்வெறிநோய் தடுப்பு திட்ட முகாம்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-02-01T00:15:47+05:30)

செட்டியாபத்தில் வெறிநோய் தடுப்பு திட்ட முகாம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

செட்டியாபத்து ஊராட்சியில் வெறி நோய் தடுப்புத்திட்ட முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு தடுப்பு பூசி போடாத வளர்ப்பு நாய்கள், மற்றும் தெருநாய்கள் கடிப்பதின் மூலம் மனிதர்களுக்கு பரவு நோய்கள் குறித்தும், வெறிநாய்களால் பாதிக்கப்பட்ட நாய்களின் உமிழ்நீரில் உள்ள கிருமிகள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்தும் விளக்கி பேசினார். நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதில் கால்நடை மருத்துவ பணியாளர்கள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story