கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றுமதி குறைந்தது


கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றுமதி குறைந்தது
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் பொருட்களை கொண்டு செல்ல ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றமதி குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.c

கோயம்புத்தூர்


விமானத்தில் பொருட்களை கொண்டு செல்ல ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றமதி குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரக்கு ஏற்றுமதி

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள் ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூ ருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும், சார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும் விமான சேவை வழங்கப்படுகிறது.

காய்கறிகள், பழவகைகள், பூக்கள், உணவு வகைகள், என்ஜினீய ரிங் உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட பல வகையான சரக்குகள் கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி. விதிப்பு

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் கோவையில் இருந்து மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு குறைந்துள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனாவுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் இருந்து மாதந்தோறும் உள்நாட்டு சரக்கு பிரிவில் 750 டன், வெளிநாடுக ளுக்கு 250 டன் என 1,000 டன் சரக்குகள் கையாளப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் வரை விமானத்தில் சரக்கு ஏற்று மதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

முன்பதிவு இல்லை

ஆனால் அக்டோபர் 1-ந் தேதி முதல் கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு 5 சதவீதமும், விமானங்களில் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இதனால் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு குறைந்துள்ளது.

சிங்கப்பூர் விமானத்தில் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 1 டன் சரக்கு கையாளப்படும். தற்போது அது அரை டன்னாக குறைந்துள்ளது. ஒரு சில நாட்கள் சரக்கு சரக்குகள் முன்பதிவு இல்லாத நிலை கூட உள்ளது.

50 டன் குறைந்தது

வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் ஷார்ஜா விமானத்தில் ஒவ் வொரு முறையும் 3 அல்லது 3.5 டன் சரக்குகள் கொண்டு செல் லப்படும். தற்போது ஜி.எஸ்.டி. காரணமாக ஒவ்வொரு முறையும் 2 டன் மட்டுமே சரக்குகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் மாதந்தோறும் கையாளப்படும் சரக்குகளின் அளவு 50 டன் வரை குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து விமான சேவை தற்போது தான் மீண்டு வர தொடங்கி உள்ளது. தற்போது ஜி.எஸ்.டி. விதிப்பு, உலகளாவிய பொருளா தார மந்தநிலை உள்ளிட்டவை சரக்கு ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

1 More update

Next Story