கடலூரில், கடல் சீற்றம்


கடலூரில், கடல் சீற்றம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடலூர்

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், கடலூர் மாவட்டத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கனமழை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் வங்க கடலில் மணிக்கு சுமார் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று மாலை முதல் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆக்ரோஷமாக எழுந்த ராட்சத அலைகள் கடற்கரையை நோக்கி சீறிப்பாய்ந்த வண்ணம் உள்ளது. இதனால் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை, மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.


Next Story