கடலூாில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூாில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாலிசி மீதான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசியின் கடன் தொகைக்கு வட்டியை குறைக்க வேண்டும்.5 ஆண்டுகளுக்கு மேலான காலாவதியான பாலிசியினை புதுப்பிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். குழு காப்பீடு வயது வரம்பு மற்றும் தொகையை உயர்த்த வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் மணிமாறன் வரவேற்றார். இதில் கோட்ட பொருளாளர் தாண்டவகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, செல்வராஜ், நெடுஞ்செழியன், ரமேஷ், ராஜசேகர், பிரகாசம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முகவர் ஓய்வு தினமும் கொண்டாடப்பட்டது. முடிவில் ஆதித்தன் நன்றி கூறினார்.