தர்மபுரியில் வரத்து அதிகரிப்பால் சேனைக்கிழங்கு விலை குறைந்தது


தர்மபுரியில் வரத்து அதிகரிப்பால் சேனைக்கிழங்கு விலை குறைந்தது
x

சேனைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் அதன் விலை நேற்று கிலோவுக்கு ரூ.6 குறைந்தது.

தர்மபுரி

சேனைக்கிழங்கு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் விரும்பி சாப்பிடப்படும் அதிக சுவை கொண்ட கிழங்கு வகைகளில் ஒன்றாக சேனைக்கிழங்கு உள்ளது. சேனைக்கிழங்கில் வறுவல், கூட்டு உள்ளிட்ட பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைகள் மற்றும் கடைகளுக்கு சேனைக்கிழங்கு வரத்தில் பெரும்பாலான காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இதன் காரணமாக இதன் விலை பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இன்றி இருப்பது வழக்கம்.

கிலோவிற்கு ரூ.6 குறைந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.66-க்கு விற்பனையான சேனைக்கிழங்கு நேற்று கிலோவிற்கு ரூ.6 விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.70 முதல் ரூ.75 வரை சேனைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டது.

வரத்து அதிகரித்த நிலையில் தேவை சற்று குறைந்ததால் இதன் விலை வழக்கத்தை விட சற்று குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story