ஈரோடு மாவட்ட போலீஸ் நிலையங்களில் பிற மாநில தொழிலாளர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பேட்டி


ஈரோடு மாவட்ட போலீஸ் நிலையங்களில்  பிற மாநில தொழிலாளர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்  போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பேட்டி
x

ஈரோடு மாவட்ட போலீஸ் நிலையங்களில் பிற மாநில தொழிலாளர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினாா்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட போலீஸ் நிலையங்களில் பிற மாநில தொழிலாளர்களுக்கு உதவி மையங்கள் அமைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார்.

7 பேர் கைது

பீகார் மாநில தொழிலாளர்களை ஏமாற்றி கடத்தி பணம் பறித்த வழக்கில் நேற்று 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளாவுக்கு வேலை தேடி வருபவர்களை குறிவைத்து, அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் ஏமாற்றி பணம் பறிக்கும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி ஈரோட்டில் நடந்த ஒரு கடத்தல் மற்றும் பணம்பறிப்பு வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

உதவி மையங்கள்

இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்று உறவினர்கள் மூலம் பறிக்கிறார்கள். இதனால் பலரும் போலீசில் புகார் கூறுவது இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு தொடர்ந்து கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வழக்கின் புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பணம் அனுப்பிய வங்கி கணக்கு, செல்போன் எண் ஆகியவற்றை வைத்து குற்றவாளிகளை மடக்கினோம்.

பிற மாநில தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார். அவருடன் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ராஜாபிரபு ஆகியோர் இருந்தனர்.


Related Tags :
Next Story