வனப்பகுதிகளில் உண்ணி செடிகளை அகற்றும் பணி மும்முரம்


வனப்பகுதிகளில் உண்ணி செடிகளை அகற்றும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதிகளில் உண்ணி செடிகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழகத்தின் அனைத்து மலைப்பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் இந்த உண்ணி செடி ஒரு விஷ செடியாகும். இந்த செடி புதர்போல வளர்ந்து இதர தாவரங்கள் வளர முடியாத அளவிற்கு பரவி விடும். உண்ணி செடியை விலங்குகள் எதுவும் சாப்பிடாது. வனப்பகுதியில் இந்த செடிகள் பரவி வருவதால் வனவிலங்குகளின் தீவனம் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த செடிகள் பரவுவதை தடுக்க வேரோடு அழிக்க வேண்டும். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

வனவிலங்குகளுக்கு தேவையான உணவு வனவிலங்குகளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. இதனால் உணவு தேடி வனவிலங்குகள் வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக உண்ணி செடிகளை பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரக பகுதிகளில் வெட்டி அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உண்ணி செடிகளால் மான், காட்டெருமை, யானை போன்ற பல்வேறு தாவர உண்ணிகளுக்கு தேவையான புற்கள் வளருவதில்லை. உண்ணி செடிகள் வரும் இடத்தில் புற்கள் போன்ற மற்ற செடிகளை வளர விடாமல் தடுத்து விடும். இதனால் தாவர உண்ணிகளின் இனப்பெருக்கும் குறைந்து விடும். இதற்காக உண்ணி செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

புற்கள் வளர்ந்தால் மான் போன்ற தாவர உண்ணிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மேலும் புலி, சிறுத்தை போன்ற ஊன் உண்ணிகளுக்கு தேவையான மான் போன்ற வனவிலங்குகளின் உணவு எளிதில் கிடைக்கும். இதனால் ஊன் ஊண்ணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால் உணவு சங்கிலி சரியாக இருக்கும். வனவிலங்குகளின் இனப்பெருக்கும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story