போலீஸ் நிலையம் முன்பு பிளேடால் உடலை கிழித்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு


போலீஸ் நிலையம் முன்பு பிளேடால் உடலை கிழித்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
x
சென்னை

திரு.வி.க. நகர்,

சென்னை எழும்பூர் காஜா மேஜர் தெருவைச் சேர்ந்தவர் சரண் (வயது 28). இவர், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போதையில் படுத்து கொண்டிருந்தார். அப்போது போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும், அவர்களை தூக்கிவிட சென்றபோது அவர்கள் தன்னை தாக்கியதாகவும் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.

இரவு பணியில் ஈடுபட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சரண் போதையில் இருப்பதால் மறுநாள் காலையில் வரும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண், தனது கையில் வைத்திருந்த பிளேடால் தனக்குதானே மார்பில் சரமாரியாக கிழித்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரத்த காயம் அடைந்த சரணை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சரணுக்கு 7 தையல்கள் போடப்பட்டு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சரண் ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தனது உடலை பிளேடால் கிழித்து காயப்படுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story