தேனி அரசு மருத்துவமனை முன்புடாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் அரவாளி தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் செந்தில் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் இறந்ததற்காக டாக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனு அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story