நல்லம்பள்ளியில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


நல்லம்பள்ளியில்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தர்மபுரி

வேலைவாய்ப்பு முகாம்

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கிறது.

இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 100- க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாமில் 10- ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இணையதளத்தில் பதிவு

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்- 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித் தகுதி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு dpIJobfaIr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். எனவே பணி காலியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story