கூடலூரில் கர்நாடக அரசு பஸ்-கார் மோதி விபத்து
கூடலூரில் கர்நாடக அரசு பஸ்-கார் மோதி விபத்துக்குள்ளானது.
நீலகிரி
கூடலூர்: கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து ஊட்டிக்கு கர்நாடக அரசு பஸ் ஒன்று, பயணிகளுடன் நேற்று காலை 11 மணிக்கு வந்து கொண்டிருந்தது. இதேபோல் கேரளாவில் இருந்து ஒரு கார் கூடலூர் வழியாக மைசூருவுக்கு சென்று கொண்டிருந்தது. கூடலூர் மாக்கமூலா பகுதியில் வைத்து எதிர்பாராதவிதமாக காரும், கர்நாடக அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்தது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் காரில் வந்த கேரள சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் கூடலூர்-கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
Related Tags :
Next Story