தேனியில்மளிகை கடைக்குள் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு


தேனியில்மளிகை கடைக்குள் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மளிகை கடைக்குள் 6 அடி நீள நல்லபாம்பு புகுந்தது.

தேனி

தேனி பழைய அரசு மருத்துவமனை எதிரே ஒரு மளிகை கடைக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு பாம்பு புகுந்தது. அங்கு அடுக்கி வைக்கப்பட்ட தக்காளி பெட்டிகளுக்கு அடியில் அந்த பாம்பு செல்வதை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அப்போது அந்த பாம்பு அங்கேயே பதுங்கி இருந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணன் என்பவருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கண்ணன் அங்கு வந்து அந்த பாம்பை பிடித்தார். அது 6 அடி நீளம் கொண்ட நல்லபாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு தேனி வனத்துறையினர் மூலமாக வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் விடப்பட்டது.


Next Story