தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு


தேனியில்  பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:  பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
x

தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அல்லிநகரம் கோட்டைக்களம் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ராஜேஷ் (வயது 38). இவர் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (36). இவர்களுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். திருமணத்தின் போது சங்கீதாவின் பெற்றோர் 20 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக கொடுத்தனர். ராஜேஷ் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது. அவரும், அவருடைய தாய் ரத்தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு சங்கீதாவை அடித்து கொடுமை செய்ததாகவும் தெரிகிறது. சம்பவத்தன்று அவரை அவருடைய கணவர் அரிவாளால் தாக்க வந்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ராஜேஷ், ரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story